இலங்கையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அமெரிக்க ஹவாய் சைவ ஆதீன முதல்வர்

Report Print Akkash in மதம்

அமெரிக்காவிலுள்ள ஹவாய் சைவ ஆதீன முதல்வர் சத்குரு போதிநாத வேலன் சுவாமிகள் மற்றும் உலகின் பல பாகங்களிலும் இருந்து 65 அடியவர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.

இவரை தரிசித்து, இவரிடம் ஆசிபெறும் நிகழ்வு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதில், பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாட்டுகள் நடைபெற்று அவரை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச்சென்றுள்ளனர்.

மேலும், மாலை 5.45 மணியளவில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அமெரிக்காவிலுள்ள ஹவாய் சைவ ஆதீன முதல்வர் சத்குரு போதிநாத வேலன் சுவாமிகளுக்கு வரவேற்புபசாரம் அளிக்கப்பட்டது.

Latest Offers