வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற திருவள்ளுவரின் குருபூசை தினம்

Report Print Thileepan Thileepan in மதம்

உலக பொதுமறையான திருக்குறளை அருளிய திருவள்ளுவரின் குருபூசை தினம் இன்று வவுனியா நகரசபை மற்றும் சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்கு முன் அமைந்துள்ள சிலையடியில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நினைவு பேருரைகளும் இடம்பெற்றதுடன், திருவள்ளுவரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் தமிழருவி த.சிவகுமாரன், வட மாகணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தமிழ் விருட்சத்தின் தலைவர் செ.சந்திரகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers