யாழ். குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா

Report Print Sumi in மதம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ். குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கொடி ஏற்றம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவிழா திருப்பலி யாழ். நாவாந்துறை ஆலய பங்குத்தந்தை அன்ரனிபாலா மற்றும் மன்னார் மாந்தை பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தருவிழா திருப்பலியில் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலருந்து பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை இத்தீவிற்கு யாத்தரிகர்கள் பாதுகாப்பான முறையில் சென்று வருவதற்கு ஏதுவாக கடற்படையினர் விசேட பாதை ஒன்றை அமைத்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers