வெகு சிறப்பாக நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலய இரத உற்சவம்

Report Print Kumar in மதம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த இரத உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியிருந்த நிலையில் இன்று காலை இரத உற்சவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் உருவாக்கப்பட்டு அண்மையில் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இராமபிரான் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக் கேணியைக் கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை காலை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.