கொழும்பில் சிவன் சந்நிதியிலிருந்து அம்மன் ஆலயத்தை நோக்கி செல்லும் பெருந்திரளான மக்கள்

Report Print Akkash in மதம்

கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்திலிருந்து இன்று காலை பால்குட பவனி ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பால்குட பவனியில் கலந்து கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.

இந்த பவனியானது இறுதியில் கதிரேசன் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தை சென்றடையவுள்ளது.

வருடந்தோறும் இடம்பெறும் இந்த பால்குட பவனியில் தமது வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.