யாழில் மாதா சொரூபத்தில் இருந்து வடியும் இரத்தக் கண்ணீர்! மக்கள் மத்தியில் பரபரப்பு

Report Print Shalini in மதம்

யாழ்ப்பாணம் - வேலனை, சாட்டி புனித சிந்தாத்திரை மாதா தேவாலயத்தின் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

குறித்த ஆலயத்தின் திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிகின்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த காட்சியை காண மக்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.