சீரடிசாயி பாபாவுக்காக ஆன்மிக நடைப்பயணம்

Report Print Akkash in மதம்

சீரடிசாயி பாபாவின் 100வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு ஆன்மிக நடைப்பயணம் ஒன்று பக்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைப்பயணம் இன்று காலை ஏழு மணிக்கு கொழும்பு - 04 பம்பலப்பிட்டி விநாயகர் கோவிலிருந்து ஆரம்பமானது.

இந்த நடைப்பயணாமானது கொழும்பு நகரின் பிரதான வீதிகளுக்கூடாக செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று சிரடிசாயி பாபா சரணாலயத்தில் நவராத்திரி விழாவை ஒட்டிய நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.