கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு

Report Print Kumar in மதம்

கிழக்கிலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு - உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நேற்று மாலை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து நேற்று மாலை அம்பாளை ஊர்வலமாக கொண்டு சென்று திருக்கதவு திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை மாலை அம்பாளின் முத்துச்சப்புர பவனியும், ஊர்காவலும் நடைபெறவுள்ளதுடன், நாளை மறுதினம் காலை மாபெரும் சக்தி மகா யாகம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை காலை அம்பாளின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தீமிதிப்பு உற்சவம் நடைபெறவுள்ளதுடன், அதனை தொடர்ந்து சக்தி பூஜையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers