அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா

Report Print Kumar in மதம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழாவின் தீமிதிப்பு உற்வம் ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யப்படுதல் நிகழ்வுடன் வருடாந்த சக்தி விழா ஆரம்பமானது.

ஞாயிற்றுக்கிழமை அம்பாளின் வாழைக்காய் எழுந்தருளல் நிகழ்வும் திங்கட்கிழமை அம்பாளின் சப்பறத்திருவிழாவும், ஊர்காவல் திருவிழாவும் நடைபெற்றுள்ளது.

நேற்று காலை சக்தி மகா யாகமும், பிற்பகல் நோற்பு கட்டுதல் நிகழ்வும், மாலை கடல்குளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஆலயத்தின் பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ த.தவராசா பூசகரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த சக்தி விழாவில் இன்று காலை விசேட சக்தி பூஜை நடைபெற்று, அம்பாள் ஊர்வலமாக வந்து தீக்குளி காவல் செய்யும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான அடியார்களின் மத்தியில் அம்பாளின் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றதுடன், இந்த தீமிதிப்பு உற்சவத்தில் சிறுர்வர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் தீமிதித்து தமது நேர்த்திகளை நிறைவு செய்தனர்.

தீமிதிப்பினை தொடர்ந்து தேவாதிகள் பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் நிகழ்வு நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து ஆயுத பூஜையுடன் உற்சவம் நிறைவுபெற்றுள்ளது.