கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் நவராத்திரி பூஜை

Report Print Thirumal Thirumal in மதம்

நவராத்திரி பூஜையின் இறுதி நாளான இன்று பாடசாலைகளிலும், அலுவலகங்களிலும் மிக சிறப்பாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டன.

அந்தவகையில், மலையக மக்கள் முன்னணியின் நவராத்திரி விசேட பூஜைகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும், காரியாலய உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.