ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் கிடைக்கும் கேதார கௌரி விரதம்

Report Print Akkash in மதம்

கேதார கௌரி விரதம் நேற்று முதல் இந்து மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று கொழும்பு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திலும் கௌரி காப்பு விசேட பூஜைகள் நடைபெற்றது.

இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என்பது ஐதீகம்.

கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும்.

அதை நிறைவேற்றித் தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சினையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

Latest Offers