கோடி அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் கேதார கௌரி விரதம்!

Report Print Akkash in மதம்

கொழும்பில் உள்ள அம்மன் ஆலயங்களில் கேதார கௌரி விரதம் சிறப்பாக இடம்பெற்று நிறைவுற்றது.

இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்து இன்றைய தினம் காப்பு கட்டி குறித்த விரதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இவ் விரதத்தை ஆண், பெண் இருபாலரும் அனுஷ்டித்தனர். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத பெண்கள் நல்ல கணவனை வேண்டியும், ஆண்கள் மங்களகரமான வாழ்க்கையை வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர்.

பெருமளவான பெண்கள் மற்றும் ஆண்கள் பக்தி பூர்வமாக இவ்விரதத்தினை நிறைவு செய்து இன்று இறையருளை பெற்றுள்ளனர்.

இதேவேளை, கேதாரம் என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ்விரதத்தினை மேற்கொண்டதால் இப்பெயர் உண்டாயிற்று.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார்.

இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது. இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவ உண்மை.