மடு பிரதேச செயலகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா

Report Print Dias Dias in மதம்

தமிழர் பெருவிழாவாம் தைப்பொங்கல் திருநாள் மடு பிரதேச செயலகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு மடு பிரதேச செயலாளர் ப.ஜெயகரன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

விழாவில் பல பாரம்பரிய, பண்பாட்டு போட்டிகளான பொங்கல் பொங்குதல், மாலை கட்டுதல், கோலம் போடுதல், கயிறிழுத்தல், பட்டிமன்றம் போன்ற போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர், பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் மடு பிரதேச செயலக பிரிவின் கிராம மட்டங்களிலான பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.