புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா

Report Print Sumi in மதம்

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று அறிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவில் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் பெருமளவானோர் கலந்து வரும் நிலையில், பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல் நாளை மதியம் 2 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பெருவிழா நடைபெறவுள்ளமையினால், இந்திய இலங்கை பக்தர்கள் கலந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யும் பொருட்டு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், கச்சதீவு ஆலய பங்குத்தந்தை உட்பட நெடுந்தீவு பிரதேச செயலாளர், கச்சதீவு போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் முப்படையினர், பொலிஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers