ஹட்டனில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த துருத்து மகா பெரஹரா

Report Print Thirumal Thirumal in மதம்

ஹட்டன் - நீக்ரோதாராம விகாரையின் வருடாந்த துருத்து மகா பெரஹரா நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துருத்து மகா பெரஹரா ஹட்டன், மல்லியப்பு சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு, ஹட்டன் நகர் ஊடாக விகாரையை சென்றடைந்துள்ளது.

இதன்போது மேல்நாட்டு, கீழ் நாட்டு மற்றும் சப்ரகமுவ பாரம்பரிய மற்றும் புதிய கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் ஹட்டன் மற்றும் ஏனைய பகுதிகளை சேர்ந்த பெருந்திரளான பௌத்த அடியார்கள், மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், எம்.திலகராஜ், ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர், பிரதி தலைவர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இதனை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.