கொழும்பில் இடம்பெற்ற தூய லூர்து அன்னை தேர் பவனி

Report Print Akkash in மதம்

பிரான்ஸ் நாட்டில் தூய லூர்து அன்னை பேராலய ஆண்டு பெரு விழா இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள புனித லுாசியாஸ் தேவாலயத்திலும் சிறப்பு வழிப்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. இதில், பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

தூய லூர்து அன்னை என்ற பெயர் பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை புனித பெர்னதெத் சூபிரூஸ் என்ற பெண்ணுக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.

இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் காட்சியும் விளங்குகிறது.

இந்நிலையில், லூர்து அன்னையின் திருவிழா பெப்ரவரி 11ஆம் திகதி வருடாவருடம் கொண்டாடப்படுகிறது.

Latest Offers