கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற ராகுகால துர்க்கையம்மன் பூசை

Report Print Akkash in மதம்

கொழும்பு - ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் ராகுகால துர்க்கையம்மன் பூசை வெகு சிறப்பாக இன்று இடம்பெற்றுள்ளது.

ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது சிறப்பு மிகுந்ததாக கருதப்படும் இந்நாளில் பெண்கள் துர்க்கையை நோக்கி தீபத்தினை ஏற்றி திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை போன்ற பல வேண்டுதல்களை முன்வைத்து சிறப்பு பூசை வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.