நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலய காயத்திரிபீடத்திலும் மஹா சிவராத்திரி விழா

Report Print Thirumal Thirumal in மதம்

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மஹா சிவராத்திரியினை முன்னிட்டு சிவன் ஆலயங்களில் நேற்று பகல் முதல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலய காயத்திரிபீடத்திலும் மஹா சிவராத்திரி விழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றுள்ளது.

இந்த பூஜையில் விநாயகர் வழிபாடு, பாலாபிசேகம், தேன் அபிசேகம், பஞ்சாமிர்த அபிசேகம், சங்காபிசேகம், திரவிய அபிசேகம் உட்பட பல்வேறு அலங்கார அபிசேகங்கள் இடம்பெற்றுள்ளன.

இரவு முழுவதும் நான்கு சாம பூஜைகள் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து சிவராத்திரி விரதத்தின் சிறப்பு தொடர்பாக ஆலய அறங்காவலரின் சொற்பொழிவும் இடம்பெற்றுள்ளது.

இவ்விஷேட பூஜை வழிபாடுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers