வருடாந்த திறன் ஊக்குவிப்பு விருது வழங்கும் விழா கொழும்பில்

Report Print Akkash in மதம்

கொழும்பு காயத்திரி சித்தர் சுவாமி முருகேசு மகா ரிஷி ஆத்ம யோக ஞான சபா ஆச்சிரம மந்திர யோக வகுப்பு மாணவ, மாணவிகளின் வருடாந்த திறன் ஊக்குவிப்பு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கொட்டாஞ்சேனை ஐங்கரன் மண்டபத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வினை ஆச்சிரம மாணவ, மாணவிகளின் கல்வி, ஆன்மீகம், உடல்தகுதி, திறன், அபிவிருத்தி, ஒழுக்கம், என்பவற்றில் அதீத அக்கறைகாட்டும் சுவாமிகளின் எதிர்காலம் முன்னேற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வு காயத்திரி சித்தர் சுவாமி முருகேசு மகா ரிஷியின் சீடரான தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த சுவாமி ஸ்ரீ சங்கரநந்தா மகா ரிஷியின் அனுசரணையில் இடம்பெற்றுள்ளது.