திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தின் 4ஆம் நாள் திருவிழா

Report Print Navoj in மதம்

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 4ஆம் நாளான இன்று மட்டக்களப்பு மாவட்ட பூசை வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவின் 4 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்ட திருவிழா பூசை இடம்பெற்றதுடன், எதிர்வரும் 7ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

இதன்போது யாக பூசை, வசந்த மண்டப பூசை மற்றும் சுவாமி வீதி வலம் வருதல் என்பன இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், கே.துரைரெட்ணசிங்கம், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers