புத்துயிர் பெற்று வரும் தமிழர் பண்பாட்டினை உணர்த்தும் காமன் கூத்து நிகழ்வு

Report Print Sinan in மதம்

களுத்துறை - இங்கிரிய பிரதேசத்தின் ரைகம் மேல் பிரிவில் காமன் கூத்து நிகழ்வு மிக சிறப்பாக கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த நிகழ்வினை கண்டுகழிக்க பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்விற்கு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுல விக்ரம நாயக்க வருகை தந்து பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது சமூகத்தில் பழமை வாய்ந்த, சம்பிரதாயங்கள் விசேடமாக சிறந்த விடயங்கள் எம்மை விட்டு சென்றுகொண்டிருக்கின்ற காலமாகும்.

இவை எந்தவொரு சமூகத்திலும் விசேடமாக பல்வேறு கலாசாரங்களுக்கு மத்தியில் எமக்கு பார்க்க முடிகிறது.

இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மக்கள் இன்று பல இடங்களிலிருந்து இங்கு வருகை தந்த மக்களை காண்கின்றோம்.

ஒரு புறத்தில் மக்கள் மத்தியில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகின்ற அதேவேளை, அருகிப்போகின்ற சம்பிரதாயங்களும் பாதுகாக்கப்படுகின்றன. உண்மையிலேயே எம்மை விட்டு தூரம் செல்கின்ற இந்த சம்பிரதாயங்களை மீண்டும் எம்மிடையே சேர்க்கின்ற முயற்சிகளுக்கு விசேடமாக இளைஞர்களுக்கு எமது நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம்.

நாம் அனைவரும் இந்த முயற்சியை பாராட்டுகின்ற அதேவேளை இதனை தொடர்ச்சியாக செய்வதற்கும் வேண்டும். சமூகத்தில் ஏற்படுகின்ற பல்வேறு அழுத்தங்கள் காரணமாக பல்வேறு விடயங்கள் இல்லாமல் செல்கின்றன.

எனினும் சிறந்த விடயங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது உணர்வாகும். இந்த காமன்கூத்து விழாவும் இதனை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு வழியமைக்கின்றது.

இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துவதோடு தொடர்ந்தும் இதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றோம்.எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த நிகழ்விற்கு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுல விக்ரம நாயக்க,பிரதேச சபை உறுப்பினர்கள் ,கிராம அலுவலகர்,பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers