வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும், இரதோற்சவ நிகழ்வும்

Report Print Thileepan Thileepan in மதம்
74Shares

தமிழ், சிங்கள சித்திரை புதுவருடம் பிறக்கும் இன்றைய தினம் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும், இரதோற்சவ நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஆதிவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவசிறி ரகுநாத கமலதாச குருக்கள் தலைமையில் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின் ஆதிவிநாயக பெருமான் உள்வீதி வலம் வந்து வெளிவீதியில் காட்சி கொடுத்தார்.

வெளி வீதியில் தேரில் ஏறிய விநாயகப் பெருமான் பக்த அடியார்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் மக்களுக்கு காட்சி கொடுத்தார்.

இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், அங்க பிரதட்சனம் மேற்கொண்டும் நேத்திக்கடன்களை நிறைவேற்றினர்.