கண்ணகி அம்மன் ஆலயத்தில் விளக்கேற்றுவதற்காக பெருங்கடலில் நீர் எடுக்கும் நிகழ்வு

Report Print Mohan Mohan in மதம்

வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி அம்மன் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கேற்றுவதற்காக இன்று சிலவத்தை பெருங்கடலில் உப்புநீர் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த விசாகப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

குறித்த பொங்கல் விழாவின் போது கண்ணகி அம்மன் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கேற்றும் வழக்கம் மரபுவழியாக தொடர்கின்றது.

இந்நிலையில் இன்று ஆயிரக்காணக்கான அடியார்வர்கள் முன்னிலையில் சிலவத்தை பெருங்கடலில் உப்பு நீர் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers