அருள்மிகு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நிறைவு

Report Print Kumar in மதம்

மட்டக்களப்பு - களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றுள்ளது.

சுயம்பாக உருவாகிய சித்தர்களினால் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.

பண்டைய முறைக்கு அமைவாக அலங்கார உற்சவமாக நடைபெற்றுவரும் ஆலயத்தின் வருடாந்த உற்சவமான 10 தினங்கள் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

நேற்று சுயம்புலிங்கப்பிள்ளையாரின் மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இன்று காலை விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வந்ததை தொடர்ந்து சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ காவடிகள் ஆடிவர விநாயப்பெருமானுக்கு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.


you may like this video....

Latest Offers