வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவம் நிறைவு

Report Print Kumar in மதம்

சோழ இளவரசியான சீர்பாததேவியினால் கட்டப்பட்ட ஆலயமாக கருதப்படும் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றுள்ளது.

ஆலயத்தில் விசேட பூஜைகள் இன்று நடைபெற்றதை தொடர்ந்து, சர்வதேச சபரிமலை சாஸ்தா பீடாதிபதி பரம்மஸ்ரீ ஐயப்ப சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் சுவாமி வெளி, உள்வீதியுலா என்பன நடைபெற்றுள்ளன.

நேற்று ஆலயத்தின் தேர் உற்சவம் பெருமளவான அடியார்கள் புடைசூழ உலங்குவானூர்தியில் பூமழை பொழிய சிறப்பாக நடைபெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பலம் பெரும் கிராமமாகவும், அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பின் உறைவிடமாகவும் வீரமுனை கிராமம் இருந்துவருகின்றது.

Latest Offers