ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் நான்காவது நாள் உற்சவம்

Report Print Kumar in மதம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் நான்காவது நாள் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் மூலமூர்த்திக்கு அபிசேகம் தம்ப அபிசேகம், யாகம் பூஜை வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றுவருகின்றது.

வசந்த மண்டபத்தில் இடம்பெறும் விசேட பூஜைகளுடன் சுவாமி உள்வீதியுலா மற்றும் வெளிவீதியுலா நடைபெற்றுவருகின்றது.

இதன்போது கோலகமாக பாரம்பரிய நிகழ்வுகளுடன் பட்டு எடுத்துவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இன்றைய உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜ குருக்களினால் ஆன்மீகவுரையும் நடாத்தப்பட்டுள்ளது.

Latest Offers