நாளை வெகு கோலாகலமாக இடம்பெறவுள்ள மடு அன்னையின் திருவிழா

Report Print Ashik in மதம்

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை வெகு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வின்சன் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் நூற்றுக்கணக்கான குருக்கள் இணைந்து மடு அன்னையின் திருவிழா திருப்பலியினை ஒப்புக்கொடுக்க இருக்கின்றார்கள்.

அதனைத் தொடர்ந்து திருச் சுரூப பவணியும், ஆசிரும் இடம்பெறும்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு குறித்து பல்வேறு ஐயப்படுகள் காணப்படுகின்ற போதும் இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பொலிஸ், இராணுவம், கடற்படை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல விதமான தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.