சுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா

Report Print Jeslin Jeslin in மதம்

சுவிட்சர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் வருடாந்தம் கொண்டாடும் மருதமடு அன்னையின் திருவிழா நேற்றையதினம் சுவிஸில் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

ஆன்மீக இயக்குனர் வண பிதா டக்லஸ் அடிகளார் தலமைதாங்க பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னை பங்கு பணியகத்தின் ஆன்மீக இயக்குனர் வண பிதா லீனஸ். சொய்சா (OMI) அடிகளார் தலமை ஏற்று திருப்பலியை ஒப்புக்கொடுத்துள்ளார்.

இத் திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சார்ந்த வண பிதா சுதர்சன் (OMI) மற்றும் சுவிஸ் நாட்டின் குருக்கள் இனைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்துள்ளார்கள்.

இறுதியில் மடு அன்னையின் திருச்சுருபம் தேர் மூலமாக வீதிவழியாக பவணி வந்து இறுதியில் மடு அன்னையின் பிரியாவிடை செபத்துடன் வண பிதா லீனஸ்.சொய்சா அடிகளார் மடு அன்னையின் ஆசீரினை இறைமக்களுக்கு வழங்கி வைத்தார்.

பெருமளவான ஈழத்தமிழர்கள் இதில் கலந்து கொண்டதுடன் பக்திபூர்வமாக அனைத்து வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

தாயகத்தில் இடம்பெறும் மடு அன்னையின் தரிசனத்தை புலம்பெயர்ந்து வாழும் மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த திருவிழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers