லண்டன் லூஸியன் சிவன் கோயில் தேர்த்திருவிழா

Report Print Dias Dias in மதம்

லண்டன் லூஸியன் சிவன் கோயில் தேர்த்திருவிழா தற்போது சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் காலை முதல் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் ஆலய மூல மூர்த்தியான சிவபெருமான் தேரில் வீதியுலா வருகின்ற நிலையில், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்துள்ளனர்.

அத்துடன் பெண்கள் பால்குடம் ஏந்தியும், தீச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers