வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் வாசாப்பு நிகழ்வு

Report Print Ashik in மதம்

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழ்வுபாடு 'புனித சூசையப்பர் வாசாப்பு' நிகழ்வு நேற்று மாலை புனித வளனார் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு தாழ்வுபாடு பங்குத்தந்தை அருட்தந்தை பிலிப்புப்பிள்ளை ஜேசுராஜாவின் ஏற்பாட்டில் அண்ணாவியார் கிறிஸ்ரியன் டயஸ் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 100 வருடங்களுக்கு முற்பட்ட தென்மோடி கூத்து தாழ்வுபாட்டு பங்கு மக்களினால் நடத்தப்படும் குறித்த வாசாப்பு நிகழ்வானது கடந்த 4 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் என்.முஜாஹீர் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த வாசாப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று இரவு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers