மோதரை மகா விஸ்ணு ஆலயத்தில் லட்சுமி அன்னைக்கு விசேட பூசை வழிபாடுகள்

Report Print Akkash in மதம்

அகில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன் மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சிக்கும் அற்புதமான காலம் தான் நவராத்திரி

நவராத்திரி ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில், ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறாள்.

அந்தவகையில் நவராத்திரியின் ஐந்தாவது நாளான இன்று மோதரை மகா விஸ்ணு ஆலயத்தில் லட்சுமி அன்னைக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது பெரும்பாலான பக்தர்கள் கலந்துக்கொண்டு திருவருள் பெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.