ஐயப்பன் விரதத்தின் முக்கியத்துவம் என்ன?

Report Print Sinan in மதம்

தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் விரத வழிபாடு.

நம் இறந்த கால வாழ்க்கையில் (முன் பிறப்பும், இந்த பிறப்பும் உட்பட) நாம் செய்த அனைத்து செயல்களுக்கும் ஏற்றவாறு நமது நிகழ்காலம் அமைகிறது.

சுருக்கமாக சொன்னால், இன்று நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அதுவே காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! இதை நம் முன்னோர்கள் அழகாக ஒரே வார்த்தையில் கர்மா என்று குறிப்பிடுகின்றனர்.

பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சிறப்பானது. குறைந்த பட்சம் 41 நாட்கள் விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையை ஆரம்பிக்க வேண்டும்.

துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பனின் திருவுருவ பதக்கம் ஒன்றினை இணைத்து மாலையணிய வேண்டும். மாலையும் கூட, தாமாக அணியக் கூடாது.

வண்ண வேட்டிகளை அணிந்து, கழுத்தில் துளசி மாலை அணிந்து, நெற்றியில் மணக்க மணக்க சந்தனத்தை இட்டுக் கொண்டு, ‘சுவாமி சரணம்’ எனும் வார்த்தையை, வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டு, பாட்டு, பஜனை, பூஜை என ஊரையே மகிழச் செய்துவிடுவார்கள் ஐயப்ப பக்தர்கள்.