பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் கோபுரதரிசன பூஜை

Report Print Akkash in மதம்

கொழும்பு-13 கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தில் இன்று காலை வெள்ளி கோபுரதரிசனம் பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.

அதிகளவிலான பக்தர்கள் இத் தரிசனத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஒரு ஆலயத்தின் கோபுரமும், விமானமும் எவ்வளவு தூரத்திற்கு தெரிகிறதோ அவ்வளவ தூரமும் கைலாசப்பிரதேசம் எனப் போற்றப்படும். இதனால் தென்னாட்டில் பல மன்னர்கள் திருக்கோயில்களில் மிக உயர்ந்த கோபுரங்களைக் கட்டினார்கள். "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்", "கோபுர தரிசனம் பாப விமோசனம்" போன்ற ஆன்றோர் வாக்குகள் கோபுரதரிசனத்தால் எமது ஆன்மா பெறும் புனிதத் தன்மையைப் புலப்படுத்துகிறது.

கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்க வேண்டும் என்ற செய்தியைப் பெரிய புராணப் பாடல் வரி குறிப்பிடுகிறது.

எனவே கோபுர தரிசனம் ஒவ்வொரு மனிதனும் கண்டு வணங்க வேண்டியது அவசியமாகும். கோவில் இல்லாத ஊர் அடவிகாடு என அப்பர் சுவாமிகள் எடுத்துரைத்தார். திருக்கோவில் இல்லாத ஊர் எவ்வளவவு செல்வம் நிறைந்த ஊராக இருந்தாலும் திருவில் ஊரே எனவும் அப்பர் சுவாமிகள் மேலும் கூறினார்.

ஊருக்கு அழகு தருவது கோவில் ஆகும். கோவிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும் என்ற நிலையில் பல ஆலயங்களில் கோபுரம் அமைக்கும் பணி பரவி வருவதைக் காணலாம்.இதுவே கோபுர தரிசனத்தின் சிறப்பாகும்.