மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் ஒளிவிழா நிகழ்வு

Report Print Kumar in மதம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பாக கருதப்படும் கிறிஸ்மஸ் வருடப்பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை சிறப்பிக்கும் வகையிலான ஒளிவிழா நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் ஒளிவிழா நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை சி.வி.அன்னதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது கிறிஸ்துவின் பிறப்பினை சிறப்பிக்கும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன், மறைக்கல்வி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.