தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் 65ஆவது பொதுச்சபை கூட்டம்

Report Print Yathu in மதம்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண அத்தியட்சக ஆதீனத்தின் 65ஆவது ஆதீன பொதுச்சபை கூட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ் வட்டுக்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் ஆதீன மண்டபத்தில் 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இக் கூட்டத் தொடரில் கடந்த 3 வருடங்களில் திருச்சபை மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் அடுத்து வரும் மூன்றாடுகளில் மேற்கொள்ளவுள்ள சமய மற்றும் சமூக பணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த கூட்டத்தொடர் தென்னிந்திய திருச்சபையின் பேராயரும் அமெரிக்கன் இலங்கை மிஷன் தலைவருமான பேராயர் டானியல் செ.தியாகராஜா தலைமையில் யாழ் ஆதீனத்திற்குட்பட்ட 77 தென்னிந்திய திருச்சபைகளின் போதகர்கள், ஆதீன பிதிநிதிகள் உள்ளிட்ட பலரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்று வருகிறது.

Latest Offers

loading...