கொழும்பு செட்டியார் தெரு முருகன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மண்டல பூசை வழிபாடுகள்

Report Print Akkash in மதம்

சபரிமலை ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் மண்டல பூசையானது 41 நாட்கள் நடக்கும். மலையாள மாதமான விருச்சிக மாதம் தொடங்கும் முதல் நாள் மண்டல பூசையும் தொடங்கும்.

இந்த மண்டல பூசை காலத்தில் ஐயப்பனை வழிபடும் பக்தர்கள் தீவிர விரதத்தைக் கடைபிடிப்பார்கள். தங்களுடைய சுகங்களை மறந்து மிக எளிமையான வாழ்க்கை வாழ்வார்கள்.

ஐயப்பன் படம் பொறித்த ருத்ராட்சம் அல்லது துளசி மாலை அணிந்து கொள்வது வழக்கம். விரதம் இருந்து மலைக்குச் சென்று வரும்வரை அந்த மாலையைக் கழட்ட மாட்டார்கள்.

மனதையும் உடம்பையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். புகைப்பிடித்தல், ஆல்கஹால் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இந்த காலப்பகுதியில் காலத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டமிட்டு கோவிலுக்குச் சென்றால் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, அதற்கான முழு பலன்களையும் பெற முடியும்.

அந்த வகையில், கொழும்பு - செட்டியார் தெரு முருகன் ஆலயத்தில் மண்டல பூசை வழிபாடுகள் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.