வட்டவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம்

Report Print Sinan in மதம்

வட்டவளை மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நேற்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கமைய இந்துக்களின் தெய்வ வழிபாட்டிற்கு ஆலயங்களே உறுதுணையாக அமைகின்றது.

இதன் அடிப்படையில் மத்திய மலைநாட்டில் அழகுமிக்க வட்டவளை நகரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் கிழக்கே மலையுச்சியில் அமைந்திருக்கின்ற லொனக் மீனாட்சி தோட்ட திருவருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா விஞ்ஞாபனத்தின் நிகழ்வு கடந்த 27ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து எண்ணெய் காப்பு நடைபெற்று மஹா கும்பாபிஷேக பெருவிழா 29ம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 12 வருடங்களின் பின்னர் தோட்ட மக்களின் ஒற்றுமையின் வெளிப்பாடாக பல கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு சிற்பங்கள் செதுக்கி மலையகத்தில் அம்மனின் அருளை அடையாளப்படுத்தக்கூடிய வகையில் இக் கோவிலின் அமைவிடம் , கோவிலின் அமைப்பு அனைவரையும் கவர்ந்ததாக காணப்படுவது விசேட அம்சமாகும்.

Latest Offers

loading...