வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற இரதோற்சவம்

Report Print Theesan in மதம்

வவுனியா நகர் பகுதியில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு பக்தர்கள் சூழ ஆலயத்தில் இன்று கிரியைகள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜை நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து கந்தசுவாமி ஆலயத்தில் உள்வீதி வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து முதலாம் குறுக்குத்தெரு வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரத்தையடைந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது தேர்.

இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சினை, கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தியுள்ளனர்.

பெருமளவு பக்தர்கள் புடைசூழ சுவாமி வீதியுலா வலம் வந்ததுடன், வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு போன்றோர் கலந்துகொண்டு சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டிருந்ததுடன் வடம் பிடித்து தேரினையும் செலுத்தியுள்ளனர்.