ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக நிகழ்வு

Report Print Thirumal Thirumal in மதம்

நுவரெலியா, ராகலை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 5ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் நேற்றையதினம் காலை மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது.

ஆலய தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா பிரதேச சபை தலைவர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பெருமளவான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், ஹெலிகொப்டர் மூலம் அங்கு அமைக்கப்பட்டுள்ள முருகன் சிலைக்கு மலர்கள் தூவப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை மேலும் குறிப்பிடதக்கது.