கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா

Report Print Rusath in மதம்

மட்டக்களப்பு , கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் தீர்த்தோற்சவம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானுக்குரிய சிறப்பு நாளாக கூறப்படும் தைப்பூச நாளில் ஆலயங்களில் விசேடபூசைகள், திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு.

அந்த வகையில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்திலும் வசந்த மண்டபத்தில் விசேட பூசை நடைபெற்று, சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வந்து பூஜை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இப் பூஜை வழிபாடுகளை சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தகுருக்கள், சிவ ஸ்ரீ வ.சோதிலிங்க குருக்கள் முன்னெடுத்ததுடன் கலிங்ககுல மக்கள் உபயத்தினை வழங்கியுள்ளனர்.

முருகப்பெருமானை நோக்கி தை பூச தினத்தில் அடியார்கள் விரதம் இருப்பதுடன், காவடிஎடுத்தல், பால்குடம் கொண்டுபோதல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.