திருக்கேதீச்சர ஆலயத்திலிருந்து இந்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Report Print Ashik in மதம்

மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழாவின் ஏற்பாடுகள் பூர்த்தியாகி உள்ளதாக திருக்கேதீச்சர ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கருணாநந்த குருக்கள் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21ஆம் திகதி நடைபெறவுள்ள மஹா சிவராத்திரி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

தீர்த்தக்காவடி, விசேட வழிபாடுகள், அர்ச்சனைகள், நான்கு ஜாம பூஜைகளிற்குரிய ஏற்பாடுகள் பக்தர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, என்று தெரிவித்துள்ளார்.