மலையகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி தின நிகழ்வுகள்

Report Print Thiru in மதம்
34Shares

நுவரெலியா - ஆவெலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவராத்திரி சிவராத்திரி தின நிகழ்வுகள் நேற்றிரவு சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

இதன் போது விசேட பூஜைகள், வழிபாடுகள், நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப் பூஜை வழிபாடுகளில் பெருமளவிலான சிவனடியார்கள் கலந்து கொண்டதுடன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணனும் கலந்து கொண்டிருந்தார்.

மலையகத்தின் பல ஆலயங்களிலும் மகா சிவராத்திரி தினத்தையொட்டி பல்வேறு வழிபாடுகள், நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.