இருநாட்டு பக்தர்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

Report Print Dias Dias in மதம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் நடைபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியர்கள் இணைந்து கொண்டாடும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் வருடத்திற்கான புனித அந்தோனியார் ஆலய திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் மற்றும் குருக்களால் கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இருதினங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் இந்தியாவின் ராமேஸ்வரம், சிவகங்கை, தஞ்சாவூர், இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 2,500இற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத் திருவிழா மதப்பாரம்பரியங்களுடனும், பக்தியுடனும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டுள்ளது.