இந்து மக்களிடம் வத்தளை இந்து மன்றம் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Gokulan Gokulan in மதம்
528Shares

வத்தளை இந்து மன்றம் இந்து மக்களிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

அந்த வகையில், இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களுக்காகவும், பொருளாதார ரீதியாக அன்றாட வருமானத்தை இழந்தவர்களுக்காகவும், மக்கள் இத்தகைய கொடூர நோய் தொற்றிலிருந்து விழிப்புணர்வுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதேபோன்று இந்து மக்கள் தெய்வ வழிபாட்டுக்காக வெளியில் செல்வதை தற்போதைய காலகட்டத்தில் தவிர்த்துக் கொள்ளுமாறும், வீட்டில் இருந்தபடியே இந்து மக்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, சமய ரீதியான புத்தகங்களையும் தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தினையும் தம்பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் நாளைய தினம் இரவு 7 மணிக்கு வீட்டு முற்றத்தில் விளக்கேற்றி இறைவழிபாட்டில் ஈடுபடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.