திருகோணமலையில் எந்தவொரு ஆலயத்திலும் எந்த அசம்பாவிதமும் இடம்பெறவில்லையென அறிவிப்பு

Report Print Abdulsalam Yaseem in மதம்
476Shares

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் எந்த வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை என ஆலய நம்பிக்கை பொறுப்பு சபையின் தலைவர் க.அருள்சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இன்று (28) திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சிலை மற்றும் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் மற்றும் தொலைபேசி மூலமாக செய்தி பரவிவருகின்றது.

இன்று அதிகாலை முதல் தொலைபேசி மூலம் பலர் அழைத்து கோயில் கலசம் மற்றும் சிலைகள் உடைந்து விழுந்ததா என கேட்டிருந்தனர்.

எனினும் அவ்வாறு எந்த அசம்பாவிதங்களும்இடம்பெறவில்லை. வதந்திகளை பரப்புவோரிடம் இவ்வாறான பொய்யான விடயங்களை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதுபோல திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும் அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விசாரித்ததன் அடிப்படையில்தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.