சார்வரி புதுவருடம் மலர்ந்துள்ளதை முன்னிட்டு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

Report Print Sujitha Sri in மதம்

அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான 'சார்வரி' சித்திரைப் புதுவருடம் இன்றைய தினம் மலர்ந்துள்ளது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சார்வரி புதுவருடம் இன்றிரவு 7.26 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இரவு 8.23 மணிக்கும் பிறந்துள்ளது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள பல ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

என்றபோதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே சித்திரை புத்தாண்டை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொழும்பு - கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகள் காணொளியாக...