இன்றைய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது? விளக்கமளிக்கும் ஐயப்பதாஸ் சிவாச்சாரியார்

Report Print Sinan in மதம்
666Shares

தங்கம், வெள்ளி வாங்குவது மட்டும் அட்சயதிருதி கிடையாது, இறைவழிபாட்டில் லக்ஷ்மியை தியானம் செய்து எந்த பொருளை வாங்கினாலும் அதிலே மகாலக்ஷ்மி குடிகொண்டிருக்கின்றாள் என்று சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதியும் அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்த பீடாதிபதி சபரிமலை குருமுதல்வருமாகிய ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் நிலவக்கூடிய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது என்பது தொடர்பில் எமது செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

அட்சய என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளை அட்சயதிருதியை திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.

அந்த வகையில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் 26ம் திகதி அன்று அட்சய திரிதியை வருகிறது. அட்சயதிருதியை அன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள் பல உள்ளன.

இன்றைய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது? தங்கம், வெள்ளி வாங்குவது மட்டும் அட்சயதிருதி கிடையாது.

இறைவழிபாட்டிலே லக்ஷ்மியை தியானம் செய்து எந்த பொருளை வாங்கினாலும் அதிலே மகாலக்ஷ்மி குடிகொள்கிறாள்.

அட்சய திருதியையை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும்.

அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் வாங்கலாம். இது இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இல்லாமை நீங்கப் படைக்கப்பட்ட நாள்.

நாம் கொடுக்கும் சிறு தானமும் பல மடங்காகத் திரும்ப வரும். இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள் என்று கூறியுள்ளார்.