இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பின் 27ஆவது புனித இரவு இன்றாகும்.
குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட லைலத்துல் கத்ர் இரவாக இன்றைய இரவு அமைகிறது.
இதன் அடிப்படையில் இன்று இரவு வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 83 வருடங்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது இஸ்லாமிய மதத்தில் உள்ள நம்பிக்கையாகும் என கொழும்பு மஹ்முதியா அரபுக்கல்லூரியின் அதிபர் அஸ்மிர் ஹசனி மௌலவி தெரிவித்துள்ளார்.
இன்று இரவு வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு இறைவானால் அனுப்பிவைக்கப்படும் வானவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.
அத்துடன் இன்று வழிபாடுகளில் ஈடுபவர்களுக்கு விசேட பாவமன்னிப்பு கிட்டும் என்பதும் இஸ்லாமிய மதத்தின் நம்பிக்கையாகும் என்றும் கொழும்பு மஹ்முதியா அரபுக்கல்லூரியின் அதிபர் அஸ்மிர் ஹசனி மௌலவி தெரிவித்துள்ளார்.