இலங்கை ஆயர் மன்றம் இலங்கை கத்தோலிக்க இறை மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கை

Report Print Dias Dias in மதம்
383Shares

இலங்கை ஆயர் மன்றம் இலங்கை கத்தோலிக்க இறைமக்களுக்கு தற்கால சூழ் நிலையை கருத்தில் கொண்டு இலங்கை நாட்டின் அரசியல் ,பொருளாதாரம், ஆன்மிகம், அபிவிருத்தி, சுகாதாரம், ஆரோக்கியம், போன்றவைகளை மையப்படுத்தியதாக அறிக்கை ஒன்றினை கத்தோலிக்க இறைமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எவ்வாறு திருப்பலி நிறைவேற்ற வேண்டும், எத்தனை நபர்கள் கூட வேண்டும், தகவல்களை எவ்வாறு காவல்துறையினருக்கு அறிவிக்க வேண்டும், இறைமக்கள் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள், எவ்வாறு அருட்சாதனங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், மக்களின் எண்ணிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும், அரசாங்க சட்டத்திட்டத்திற்கு அமைவாக சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், நற்கருணை பெறும் வழிமுறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும், அருட்சாதன கொண்டாட்ட நிகழ்வுகள் எவ்வாறு அமையப்பெற வேண்டும், இன்னுமாக கொஞ்சம் கொஞ்சமாக இறைமக்களை ஒன்று சேர்த்து எவ்வாறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை மையப்படுத்தியதாக இவ்வறிக்கை அமையப்பெற்றுள்ளது.