தென்னமரவடி சித்திவிநாயகர் ஆலயத்தில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தீர்த்தோற்சவம்

Report Print Gokulan Gokulan in மதம்
84Shares

திருகோணமலை - தென்னமரவடி, வரசித்தி விநாயகர் கோவிலின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 35 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றுள்ளது.

குறித்த விழா நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காலையில் விநாயகருக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து விநாயகர் உள்வீதி வலம்வந்ததையடுத்து, கோவிலினுடைய மரபு வழியில் விநாயகர் வீதி உலாவாக பறையன் ஆற்றிற்கு எடுத்து வரப்பட்டு, அங்கு தீர்த்த உற்சவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, குறித்த தென்னமரவடி ஆலயத்தில் அலங்கார உற்சவம், நீண்டகாலமாக இடம்பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிற்பாடு குறித்த ஆலயத்தில் அலங்கார உற்சவம் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிடட பெருந்திரளான அடியவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.